History of Church

தூய திரித்துவ ஆலயம்

வரலாற்றுப் பாடல்

1) பெத்லேம் நகர் தன்னில் உதித்த நல்யேசு நாததே
காசினியிலெங்கும் சபையாக நின்று ஓங்கிட
கண்ட நேசர் இந்த மூவரசம்பேட்டை தன்னிலே
காட்டி சபை நாட்டி இப்புனித நாளிலே – 2

ஆ நன்னாள் இதனைக் கொண்டாடுவோம்
ஆண்டவர் ஈவைவிண்டாடுவோம்
ஆவி ஆத்மா தேகம் எல்லாம் அர்ப்பணித்துப் பாடுவோம்
அஞ்சலி செய்தஞ்சுகாயத் தஞ்சம் சூடுவோம்

2) ஆத்ம தாகம் கொள்ள தைரியம் ஐயர் காலம் முன்னிலே
ஆயிரத் தொளாயிரத் தருபத் தெட்டு பின்னிலே
அன்பர் ஏசு ஞான திட்சை பெற்ற சுந்தரம் ஐயரால்
ஆதி மார்க்க ஜோதிவீசும் பாக்கியம் பெற்றோமே

3) பொன் யுகம் பாஸ்கரன் ஐயர் பூமான் காலம் பூத்ததே
பூரணமாய் ஆராதனை ஒழுங்குகள் பெற்றோமே
பல்லாவரம் சேகரத்தில் மூவரசம்பேட்டையும்
தென் இந்திய திருச்சபையின் அங்கமானதே

4) பாஸ்கரன் ஐயா கால முதல் தாமஸ் ஐர் முன்னிலே
ஆலய ஆராதனை ஒழுங்குடனே நடந்தேர
பூரணமாய் சபையார் யாவரும் இராஜபோஜனம் பெற்றோமே
பொல்லா இருள் நீங்கி உள்ளம் பொங்கி ஆர்த்ததே.

5) தாமஸ் ஐயர் துணையுடன் ரூப் சிங்கார் ஐயரும்
நோபுள் சந்திரன் ஐயரையும் ஆண்டவர் ஈந்தாதே
ஆத்துமத்தின் தாகம் தீர அற்புத போதனையும்
பற்பலவும் ஊக்கிச் செய்தார் பார்க்க நேர்த்தியே

6) அன்பர் சாமுவேல் ஐயருடன் பிரபாகர் ஐயரும்
தற்கால குருவாக பாண்டியன் ஐயர் வந்தாரே
அன்னாரின் ஆசியுடன் அஸ்திபாரம் கண்டோமே
ஜெயகீதம் பாட, அருள் விரிவானதே.

7) நாதர் தந்த பாக்கியமதை நல்லுள்ளத்தில் எண்ணியே
நல்லோர் ராபர்ட் மோசஸ் அமிர்த நாயகம் நண்ணியே
பீட்டர்ஸ் காலனியில் ஓர் ஆலயம் எழும்பிட
நாடும் துணை செய்து கிளை நாட்டப் பெற்றோமே

8) பேராயர் நியுபிகியின் நல் வருகையும் பெற்றோமே
கொண்டபிரன் வல்லமையால் ஆசீர்வாதம் கண்டோமே
ஆலய நில முடிந்து அற்புதங்கள் காண்போமே
கோமான் விசுவாச மதைக் கோணாது காப்பர்

9) பேராயர் சுந்தர் கிளார்க் வருகையும் பெற்றோமே
எதிணொண் ணொண் எழுபத்தாறில் தூய திருத்துவ ஆலயம்
கண்டோம் ஆர்ப்பரிப்போம் இன்று ஏசு நாமம் ஜொலிக்க
ஆனந்தம் ஆனந்தம் என்று ஆர்ப்பரிப்போமே

10) இராஜசேகர் ஐயர், சாமுவேல் ஐயர், டேவிட் தேவ இரக்கம் ஐயரும்
எசேக்கியேல் ஐயர் ஜான் தனபாலன் ஐயர், ஏர்னெஸ்ட் ஜெயக்குமார் ஐயரும்
தொடர் ஊழியத்தினால் சபை விரிவானதே
அல்லேலூயா என்று நாம் ஆர்ப்பரிப்போமே

11)தேவ பிரசாத் ஐயருடன் ஜெபராஜ் ஐயா அவர்களும்
முப்பெரும் விடாதனை சிறப்புடன் நடத்தினர்
அன்னாரின் சேபையால் கிராமம் ஊழியம் தொடர்ந்ததே
ஆனந்தம் ஆனந்தம் என்று ஆர்ப்பரிப்போமே

12) தற்கால குருவாக சைலஸ் ஞானதாஸ் ஐயரும்
நாற்பதாம் ஆண்டு விழாவை சிறப்புடன் நடத்தினார்
பூரணமாய் சபையார் யாவரும் உற்சாகமாய் கலந்து
பற்பல நிகழ்ச்சிகளை கண்டு கழித்தோம்.

13) ஆண்டவரின் இன்னருளால் இச்சபையார் ஓங்கவே
அஞ்ஞானம் அகற்றி மெய்ஞான ஒளி வீசவே
அற்புத ஆசீர்வாதங்கள் பெற்று மிக ஓங்கவே
இந்த சபை என்றென்றுமே ஓங்கி வளரவே

14) முன்னோர் பக்தி எண்ணி சபை முன்னேறிய வாழ்கவே
முண்ட விசுவாசத் தோடத்திலட்சாதீனம் வாழ்கவே
மூவுலகம் ஒன்றாம் சத்திய வேதம் யேசு நாமமே
மூப்பர் குருமார் சபைகள் வாழ்க வாழ்கவே

15) வேதம் எனும் கடலிலே மூழ்கி முத்தெடுத்திட
வேதத்தோடு இலக்கண இலக்கியத்தையும்
போதனை செய்வதில் வல்ல பிரேமைய்யா ஆயரே
ஆதங்கத்தோடு ஆலய விரிவாக்கம் செய்தாரே

16) பக்கத்திலே பேரீஷ் ஹாலும் விரைந்து எழும்பிட
ஆக்கப் பூர்வமாய் பெரும் பங்கு கொண்டாதே
ஊக்கத்தோடு உழைத்த பிரேமைய்யா ஆயரே
சீக்கிரமாய் அவர் பணி மேலும் ஓங்கவே

17) சுவிசேஷப் பணிதனை எனது மூச்சென
ஆவிக்குரிய ஊழியத்தைச் செய்தாரே
காவியம் படைத்து வரும் நல்ல ஆயன் ஐயரே
பாவிகளை நேசித்திடும் வல்ல இயேசுவின்

18) பணிதனை காளகஸ்தி இன்னும் பல இடத்திலும்
துணிவாகச் செய்து வரும் பிரடெரிக் சார்லஸ் ஐயா
அணி அணியாய்த் திரள் கூட்ட மக்களும் எழும்பிட
ஆணி வேராய்ச் செயல்படும் நம்ம ஆயரே